Thursday 27 September 2018

வெண்மை

வெண்மை என் நிறத்திலும் இல்லை.
                              குணத்திலும் இல்லை,

ஏனென்றால்!
               
                     எனக்கு வாழ கற்றுக்கொடுத்த இந்த சமூகம் வெண்மையென்றால்
நல்லதையே நினைக்கும் தீய குணங்கள் என்பதில் தெளிவாக நிற்கிறது. 

Tuesday 25 September 2018

அவள் இல்லாத இரவு

இன்னிசை பாடும் இரவு
ஏதோ சொல்கிறது காற்று
எதற்கோ !சிரிக்கிறது மரங்கள்
என்னையே பார்க்கிறது வானம்
எனக்காய் மினுக்கிறது விண்மீன்

இருப்பினும் ஏதோ!சஞ்சலிக்கிறது மனம்
நிலவை காணவில்லையென்று.....

ஆம்! என் நிலவு களவு போனது.

கறை நல்லது

'நீண்ட நாட்களுக்கு பிறகு பேனாவை தூக்கினேன்
                                          கவிதை எழுதுவதற்கு அல்ல'
கடந்து போன சில நினைவுகளின் "கறை"படிந்ததால்
ஆமாம் "கறை" நல்லது.

Thursday 27 April 2017

Farmers are god

விதைப்பவன் ஒருவன்!உண்பவன் ஒருவன்
எங்கள் அரிசி எங்களுக்கே சொந்தமில்லை.
கோடீஸ்வரன் வம்சம் இல்லை-ஆனால்
கோடி வீட்டு உலைகளிலே எங்கள் அரிசி.
பயிரிட்ட விவசாயி கருவுற்ற தாய்போலே!
அறுவடை நாட்களே எங்கள் பிரசவதினம்.
நான் பள்ளி செல்லவில்லை-மாறாக
மண்வெட்டி ஏந்தி சேற்றிலே இறங்கினேன்.
என் பசி தீர்க்க ஆயிரம் தொழிலுண்டு
ஊர் பசி போக்க இதுவே உயிர் தொழில்.
பெண்ணை வைத்து தொழில் செய்பவன் கூட கோடியில் புரள்கிறான்
பலர் பசி தீர்க்கும் எஜமான்கள் நாங்கள் பிச்சைக்காரனாக வாழ்கின்றோம்.
அழுத்தி!அழுத்தி!சொல்லும் இந்த உலகம்
ஏழை விவசாயி என்று....
உணர்ந்து பாருங்கள் உண்மையில் வள்ளல் நாங்கள்.
பாலில்லா குழந்தை போலானது என் நிலம்
பால்வற்றிய தாய்போலானது என் மனம்.
என் நிலத்தை மலடாக பார்க்க முடியவில்லை..
இதுவரை என் மண்ணுக்காக வாழ்ந்தேன்...
இனி என் மண்ணுடனே வாழப்போகிறேன்.
உங்களில் ஒருவர்கள் தான் நாங்கள்
எங்களை இறப்பை உதாசினப்படுத்தாதீர்கள்.
நான் பட்டினியால் சாகவில்லை
உங்கள் பசி போக்க தகுதியற்றவனாய் சாகிறேன்.
விவசாயிகள் எங்களை விடுங்கள்,விவசாயத்தை காப்பாற்றுங்கள்....
மண்ணில் புதையும் அனைத்துமே மக்கிப்போகும்
ஆனால் விதைகள் மட்டுமே உயித்தெழும்....
நான் என் நிலத்திலே விதையாகிறேன்...
விவசாயம் உயிர்த்தெழ என் உயிரை பரிசலிக்கிறேன்....